பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பர்கூர் பகுதியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.;
பர்கூர்:
பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-ம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜை கூடை புறப்படுதல், கருட கம்பம் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சாமி திருவீதிவிழா நடைபெற்றது.
இதேபோல் கொல்லப்பள்ளி கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.