மாணவ-மாணவிகளுக்கு ஆளுமை திறன் பயிற்சி

மாணவ-மாணவிகளுக்கு ஆளுமை திறன் பயிற்சி நடைபெற்றது

Update: 2022-10-18 19:38 GMT

கொட்டாம்பட்டி, 

கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளின் ஆளுமைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் வகுப்பு பாடங்களை தவிர்த்து பல்வேறு கூடுதல் பயிற்சிகள் அளிக்க ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் இளைஞர்கள் குழு இணைந்து முதற்கட்டமாக உணர்வுசார் நுண்ணறிவு என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது. தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.

கோயம்புத்தூரை மையமாக கொண்டு இயங்கும் ட்ராக் அமைப்பினர் ஸ்ரீமதி, அசுரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். சுயவிழிப்புணர்வு, சுய ஒழுங்கு முறை, சமூக திறன் மேம்பாடு, கோபம், பயம், தற்கொலை உணர்வு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் ஜெயா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கம்பூர் ஊராட்சி இளைஞர் குழுவினர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்