அதிகாரிகள் பரிந்துரை இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய அனுமதி; கலெக்டர் தகவல்
கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரை பெற்றிருந்தால் மட்டும் நெல் கொள்முதல் செய்ய அனுமித என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட முழுவதும் 67 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் அடங்கலில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரின் பரிந்துரை பெற்றிருந்தால் மட்டுமே பதிவு செய்து நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மட்டுமே முற்றிலும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.