100 நாள் வேலை திட்ட பணிக்கு நிர்வாக அனுமதி விரைந்து வழங்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளுக்கு நிர்வாக அனுமதி விரைந்து வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.;

Update: 2023-02-12 18:45 GMT

சிவகங்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளுக்கு நிர்வாக அனுமதி விரைந்து வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கூட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டமைப்பின் செயலாளராக கார்த்திகை சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் நடந்த கூட்டத்தில், சிவகங்கை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரும் பணிகளுக்கு கலெக்டர் அனுமதி அளித்தும் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாக அனுமதி கொடுக்க கால தாமதம் செய்கின்றனர்.

அனுமதி

இதனால் அந்த பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நிர்வாக அனுமதி வழங்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை கிராம விருது பெற்று வந்த பிரவலூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்