பெரியாரின் 49-வது நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்;
சென்னை,
தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி தந்தை பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே உள்ளபெரியாரின் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.