பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
களக்காடு:
பெரியார் நினைவு தினத்தையொட்டி, திருக்குறுங்குடியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.செல்வகருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருக்குறுங்குடி பேரூர் கழக செயலாளர் ச.கசமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் செ.முத்துராஜ், லெ.சங்கரபாண்டியன், அவைத் தலைவர் பொன்னிவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.