பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி

பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Update: 2023-08-22 19:34 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள கண்மாய்களில் அனுப்பன்குளம் பெரியகுளம் கண்மாய் மிகப்பெரியது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழ்துளை அமைத்து அதில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போதிய பராமரிப்பு இன்றி கண்மாயில் அதிக அளவில் முட்செடிகள் வளர்ந்து கண்மாய் நீரை அதிக அளவில் வீணாகி வந்தது. தண்ணீர் வரும் பாதைகளிலும் அடைப்பு ஏற்பட்டது. கண்மாய் கரைகளும் பலம் இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் அனுப்பன்குளம் பஞ்சாயத்து நிர்வாகம் கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்த முடிவு செய்தது. இதற்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியினை கொண்டு கடந்த மாதம் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் அனுப்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து செய்ய ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்