பெரியகுளம் கோர்ட்டில் வக்கீலிடம் தகராறு செய்த வாலிபர் கைது
பெரியகுளம் கோர்ட்டில் வக்கீலிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் பாரதிராஜன் (வயது 25). வக்கீல். இவர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த சருத்துப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன் (35) என்பவர் கோர்ட்டு வளாகத்தில் விசில் அடித்துள்ளார். இதனை பாரதிராஜன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், பாரதிராஜனை தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தென்கரை போலீசில் பாரதிராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர்.