பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
காட்டுப்புத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், பெரியசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதற்கான யாசாலை பூஜைகள்தொடங்கின. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், பெரிய காண்டி அம்மன், பெரியசாமி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.