பெரம்பலூர் பா.ஜனதா பட்டியல் அணியினர் நூதன போராட்டம்
பா.ஜனதா பட்டியல் அணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில், தமிழகத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்தும், உண்டியல் மூலம் யாசகமாக கிடைக்கும் நிதியை வசூலித்து தமிழக அரசிற்கு அளிக்கும் நூதன போராட்டம் பெரம்லூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று நடந்தது. இந்த நூதன போராட்டத்திற்கு பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜனதா தலைவர் செல்வராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், பா.ஜனதாவினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.