பெரம்பலூர் நகர்மன்ற கூட்டம்

பெரம்பலூர் நகர்மன்ற கூட்டம் நடந்தது.;

Update: 2023-06-30 19:55 GMT

பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) ராதா, துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலைகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மொத்தம் 19 பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவை நகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதற்கு கலெக்டர் அறிவிப்பு கொடுத்துள்ளார். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்