ஆற்காட்டில் ரூ.25 லட்சத்தில் மக்கள் நல மருத்துவ மையம்

ஆற்காட்டில் ரூ.25 லட்சத்தில் மக்கள் நல மருத்துவ மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2022-06-08 18:17 GMT

ஆற்காடு

ஆற்காடு நகராட்சி 1-வது வார்டில் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்நாட்டு விழாவிற்கு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் 1-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முன்னா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்