மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-05 19:00 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்ததா? என்று பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்