மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 286 மனுக்கள் பெற்றப்பட்டது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக 14 பயனாளிகளுக்கு ரூ.6.85 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 150 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 25 நபர்களுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகளையும், 10 நபர்களுக்கு விலையில்லா மின்மோட்டார் உடன் கூடிய தையல் எந்திரந்தினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.