காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

Update: 2023-08-22 08:40 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு வந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக கலெக்டர் மொத்தம் 284 மனுக்களை பெற்றார். பின்னர் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், வருமானம் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது வேலை செய்ய முடியாமல் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளில் கல்வி செலவிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 மாணவ- மாணவிக்கு குறித்த கால வைப்புத் தொகைக்கான ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்துக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டது.

உதவித்தொகை

தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான தொழிற்கல்வி உதவித்தொகையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாபு, காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் சுமதி, முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்