மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.;
செங்கோட்டை:
செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொது மக்கள் கொடுத்த 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவரசி, சரசையன், இசக்கி ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பிரச்சினைக்கு முடிவு கூறினர். நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.