மக்கள் குறைதீர்வு முகாம்

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது.;

Update: 2023-07-26 13:24 GMT

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நில மோசடி, பண மோசடி, ஆன்லைன் மோசடி, அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 22 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்