100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
போளூர்
100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர் ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ந.சிவாஜி தலைமை தாங்கினார்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், இந்த ஊராட்சியில் மற்றும் 425 மாற்றத்தினாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ச்சியாக 2 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ''உண்மையான மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து சுழற்சி முறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதையேற்று அனைவரும் கலந்து சென்றனர். பேச்சுவார்த்தையின்போது ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா அண்ணாதுரை, துணைத்தலைவர் கவிதா பிரகாசம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் இருந்தனர்.