மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-19 18:45 GMT

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை திட்டத்தில் தனி வேலை கார்டு வழங்கி ரூ.294 கூலி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி உள்ள குடும்பங்களில் அந்தியோதய அன்ன யோஜனா கார்டு வழங்க வேண்டும், தேசிய அடையாள அட்டை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும், குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் தாமதம் இன்றி மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும், சுயதொழில் தொடங்க நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேஷ், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சீனிவாசன், கமுதி தாலுகா செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் ஜீவா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இதுகுறித்து அரசின் கவனத்திற்குகொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்