மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஆயக்குடியில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-29 19:45 GMT

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, பழைய ஆயக்குடி எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மணிகண்டன் வீடு முன்பு சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பேரூராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களிடம் ஆயக்குடி பேரூராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கால்வாயை தூர்வாரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நடந்த காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்