அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராததால் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மக்கள்:கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மக்கள்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராததால் கிராமசபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்ததால், விருத்தாசலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-02 18:52 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடியப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் சிவகோதண்டம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பேசினா். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. எனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும். பழுதடைந்த அரசு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், சேதம் அடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும், சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும், மயானப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்