வாயில் வெள்ளை துணி கட்டி வந்த பொதுமக்கள்

வாயில் வெள்ளை துணி கட்டி வந்த பொதுமக்கள்

Update: 2023-01-26 18:45 GMT

குன்னூர்

குன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் உபதலை ஊராட்சி கிராம சபை கூட்டம், கக்கன் நகரில் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு வந்த பொதுமக்களில் சிலர், வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டும், ஊராட்சியை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் வந்தனர். மேலும் அவர்கள் ஊராட்சியில் முறைகேடு நடப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்ததோடு, அது பற்றி விளக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நபர்களை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்