சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

கலவை போலீஸ் நிலையம் எதிரே சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2023-09-21 17:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையம் எதிரே மண் சாலைகள் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்யும்போது சாலை முழுவதும் தண்ணீர்தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது சாலையின் அருகே உள்ள கடைகள், நடந்து செல்பவர்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்