நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டி,
சாத்தூர் அருகே உள்ள படந்தால் ஊராட்சியை சேர்ந்த தென்றல் நகர், முத்துராமலிங்கபுரம், வசந்தம் நகர், மருது பாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான இறைச்சிக்கடைகள் உள்ளன. மாமிச கழிவுகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டி செல்வதால் ஏராளமான தெருநாய்கள் மாமிசங்களை எடுத்து ரோட்டில் திண்பதாலும் பின்னர் ரோட்டில் செல்பவர்களை மிரட்டுவதால் வாகன ஓட்டிகள் ரோட்டில் தடுமாறி விழுகின்றனர். தெரு நாய்கள் தொல்லையால் ெபாதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆதலால் தெரு நாய்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.