வீடுகளை இடிக்க எதிர்ப்பு ெதரிவித்து சாலை மறியல்

வலங்கைமான் அருகே நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினர்

Update: 2022-10-28 18:45 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களின் வீடுகளை இடித்து அகற்றும் முடிவை கண்டித்தும் புறம்போக்கில் குடியிருக்கும் இடத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆலங்குடி கிராமத்தில், கும்பகோணம் -மன்னார்குடி மெயின் ரோட்டில் சாைலமறியல் நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராதா ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்