தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்

தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்

Update: 2023-02-20 18:45 GMT

கோவை

தமிழக மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தெலுங்கானா கவர்னர்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததரராஜன் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணியாளர்கள் தினம் உன்னதமானது. இதனை ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும்.

மாநிலங்களில் பொறுப்பேற்கும் கவர்னர்கள் பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுகின்றனர். எங்களைப்போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் அளிப்பதில்லை.

அடையாளம்

எனவே மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு கொண்டு கவர்னர்களாக நியமிக்கிறது. தமிழக மக்கள் எங்களை போன்றவர்களை நாடாளுமன்றத்துக்குதேர்வு செய்து இருந்தால் அதிகம் பேர் மத்திய மந்திரி ஆகிஇருப்பார்கள்.

எனவே தமிழக மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும். இதை சொன்னால் அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.

கருத்து கூற முடியாது

ஆனால் திறமையானவர்களை மக்கள் கண்டு கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதற்கு, யார் அந்த வாய்ப்பை கொடுக்கிறார்கள்? என்று சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவர்னரான நான் கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

-------------------

Tags:    

மேலும் செய்திகள்