கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை - மாவட்ட கலெக்டர்
கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது;
கோவை மற்றும் தமிழகம் முழுவதும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில்,கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது
இந்த நிலையில் ,இன்று இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சமீரன் கூறியதாவது ;
கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை .கோவையில் பதற்றத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமைதியை நிலைநாட்ட இருதரப்பு அமைப்புகளுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்தினோம்.சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை.கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு கூறினார்.