காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்
வந்தவாசி அருகே காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வந்தவாசி
வந்தவாசி அருகே காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காருக்கு டீசல் நிரப்பினார்
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று இரவு மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகர், அந்த காருக்கு டீசலை நிரப்பினார்.
டீசல் நிரப்பி முடிந்ததும் பணம் கேட்டபோது, காரில் வந்தவர்கள் பேடிஎம்மில் பணம் செலுத்துவதாக கூறியுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
பின்னர் அவர்கள் பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன் பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காரின் பதிவெண் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.