பொங்கல் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்

மயிலாடுதுறை நகரில் பொங்கல் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Update: 2023-01-14 18:45 GMT

மயிலாடுதுறை, ஜன.15-

மயிலாடுதுறை நகரில் பொங்கல் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சீர்வரிசை

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு அறுவடை பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று திருமணமான பெண்களுக்கு, அவர்களுடைய தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இந்த பொங்கல் சீர்வரிசையில் கரும்பு, காய்கறிகள் மற்றும் சில்வர், பித்தளை பாத்திரங்கள் இடம்பெறும். இதேபோல தங்கள் வீடுகளிலும் மண்பானையில் அல்லது புதிய பாத்திரங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அப்போது கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் இடம்பெறும்.

பொங்கல் பொருட்கள்

இத்தகைய சிறப்புமிக்க தைப்பொங்கல் பண்டிகையை இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறை நகரில் நேற்று பொங்கல் பொருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர். மயிலாடுதுறை பெரியகடை வீதி, மகாதனத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, பூக்கடைத் தெரு, ெரயிலடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் கரும்பு, , பூ, பழம் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் கடைவீதி, சாலைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்