மேடையில் பேசும் போது கலைந்து சென்ற மக்கள் - அதிர்ச்சியடைந்த ராஜேந்திர பாலாஜி
மேடையில் தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கலைந்து சென்றதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சியடைந்தார்.;
சிவகாசி,
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கலைந்து சென்றதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சியடைந்தார்.
சிவகாசியில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினார்.
இந்தநிலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.