உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெறுமா?

கோரையாறு பாலம் அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெறுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-02-21 18:45 GMT

கோரையாறு பாலம் அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெறுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோரையாறு பாலம்

திருவாரூர்- மன்னார்குடி சாலையில் கூத்தாநல்லூர் அருகே உள்ளது கோரையாறு பாலம். இந்த பாலத்தையொட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் கோரையாறு, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், கோட்டகச்சேரி, குடிதாங்கிச்சேரி, வாக்கோட்டை, லெட்சுமாங்குடி மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சுக்கு காத்திருப்பது வழக்கம்.

வேலைக்கு சென்று திரும்புவோர் இரவு நேரங்களில் இந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். ஆனால் அங்கு போதிய மின் விளக்கு வசதி இல்லாதால் கோரையாறு பாலம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இரவு நேரத்தில் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

உயர்கோபுர மின் விளக்கு

கோரையாறு பாலம் எதிரே உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக கீழ்தளம் அமைக்கப்பட்டதோடு சரி, 2 ஆண்டுகளாகியும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெறவில்லை. அங்கு அதிக அளவில் வீடுகளும் இல்லை. ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாகும்.

இதனால் இரவு நேரங்களில் பஸ் ஏறுபவர்கள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு வழிப்பறி நடக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்