ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகார்

சங்ககிரி அருகே ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

Update: 2022-12-06 20:15 GMT

சங்ககிரி:-

சங்ககிரி அருகே உள்ள இருகாலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துவிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இருகாலூர் ஊராட்சியில் கல்லேரி என்ற ஏரி உள்ளது இந்த ஏரியில் மீன்பிடிப்பதற்கு ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. குத்தகைக்கு ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு வளர்த்து பின்னர் அதனை பிடித்து விற்பனை செய்து செய்து வருகின்றனர். ஏரியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாக இறந்த கோழிகள் மற்றும் கோழி, ஆடு, மாடு கழிவுகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏரி தண்ணீர் மாசுடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதால், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மீன்பிடி குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்