கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-08-07 19:00 GMT

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி 6-வது வார்டில் தாழ்த்தப்பட்ட அருந்தியர் மக்கள் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 15-வது மத்திய நிதிக்குழுவின் படி ரூ5.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டு குடிநீர் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னரும் அப்பகுதி மக்களுக்கு குடிக்க குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி கடையம் யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் மாரி குமார் தலைமையில், 3-வது வார்டு கவுன்சிலர் ஜனதா முன்னிலையில் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடையம் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராம் மோகன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், தமிழ் புலிகள் கட்சி குமார், திராவிட தமிழர் கட்சி கருவீரபாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாக்யராஜ், இளைஞர் அணி காங்கிரஸ் பால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் கடையம் யூனியன் ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் ஆகியோர் ேபச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்படி மாலையில் குடிநீர் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்