ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
திருவெண்ணெய்நல்லூர் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எரளூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. ஆனால் அந்த அரிசியில் புழு, பூச்சி இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அரிசியை வாங்காமல் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தரமுள்ள அரிசி வழங்குமாறு கூறி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் வட்டவழங்கல் அலுவலர் கனிமொழி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்