ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இட்டமொழியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-19 21:12 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இட்டமொழியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வீடுகளுக்கு குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்