சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-05 17:54 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கொங்கம்பட்டு மேம்பாலம் அருகில் நேற்று காலை 10 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மடுகரை- பட்டாம்பாக்கம் சாலை குண்டும்- குழியுமாகவும் படுமோசமாக இருப்பதாகவும், அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடைய பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மறியலில் ஈடுபட்ட 52 பேர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்