ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-01 18:21 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வாயிலில் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிளை தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். திருஞானசம்பந்தமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் ஓய்வு பெற்ற பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி, விடுப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்காத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை பொருளாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்