ஊட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அப்போது சங்க மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளர், பஞ்சாயத்து உதவியாளர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். அகவிலைபடி நிலுவைத் தொகை 1.1.2022 முதல் வழங்க வேண்டும். ஓய்வூதியர் 70 வயது ஆன பின்பு 10 சதவீதம் கூடுதலா வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் நிர்வாகிகள் வர்க்கிஸ், வில்லியம், வீரையா, ராமன்குட்டி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.