ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

சங்கரன்கோவிலில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-26 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலுசாமி, இணைச் செயலாளர் செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் நாராயணன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் மோகனசுந்தரம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரி, நிர்வாகிகள் வேல்ராஜன், மாடசாமி, கருப்பையா ஆகியோர் பேசினார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் துரை டேனியல், அருணாச்சலம், நாராயணன், சலீம் முகமது மீரான், சுகுமார் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்