ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில் ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம்- அரசு கூடுதல் செயலாளர் பங்கேற்பு

Update: 2022-07-30 13:48 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். ஓய்வூதிய இயக்ககத்தின் துணை இயக்குனர் பி.வேலாயுதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அழகர்சாமி, மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வூதிய இயக்குனரும், அரசு கூடுதல் செயலாளருமான டி.ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து பெறப்பட்ட 37 மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரால் நேரடியாக உரிய ஓய்வூதியதாரர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மருத்துவ நிதியிலிருந்து மருத்துவ செலவினத்தை மீள வழங்குவதற்கான காசோலைகளை டி.எஸ்.சம்மந்தன் என்பவருக்கு ரூ.17 ஆயிரத்து 174-ம், வி.ஆர்.அன்சர்பாஷா என்பவருக்கு ரூ.2 ஆயிரத்து 301-ம், சுருதி பிலஸ்சி என்பவருக்கு ரூ.7 ஆயிரத்து 64-ம், எம்.ராதா என்பவருக்கு ரூ.17 ஆயிரத்து 388-ம், திருவண்ணாமலையை சேர்ந்த வி.சுந்தரபாண்டியன் என்பவருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் ஓய்வூதிய இயக்குனரால் வழங்கப்பட்டது.

மேலும் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களுக்கு ஓய்வூதிய இயக்குனர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மனுக்கள் அளித்த மனுதாரர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்