திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் அருகே போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றவர்களின் வண்டி எண்ணை குறித்து வைத்துவிட்டு அவர்களுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதித்தனர். மேலும் சாலையில் ெஹல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கினர்.