மினி பஸ் டிரைவர்- கண்டக்டருக்கு அபராதம்
அம்பையில் மினி பஸ் டிரைவர்- கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அம்பை:
அம்பை மெயின் ரோட்டிலும், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பும் அதிக ஒலி எழுப்பும் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பை குற்றவியல் நடுவர் பல்கலைச் செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் அம்பை போலீசார் நேற்று அம்பை மெயின் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பியதாக மினி பஸ் டிரைவர்கள் முகமது மைதீன், மாரியப்பன், கண்டக்டர்கள் சுகுமார், சுடலை ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.