கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 3 கடைகளுக்கு அபராதம்

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-11 20:45 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறியும் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது அறிவுறுத்தலின்பேரிலும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின்பேரிலும் கொடைக்கானல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் அலுவலர்கள் நேற்று நகரில் உள்ள பழக்கடைகள், சாக்லேட் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது குறிஞ்சி நகர், எம்.எம்.தெரு, லாஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தபோது, 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்