அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகளுக்கு அபராதம்

அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகளுக்கு அபராதம்

Update: 2023-07-06 20:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகே பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 1 மணி வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளின் எடை அளவை ஆய்வு செய்தபோது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 லாரிகளுக்கும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்