அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் லாரிகளில் ஏற்றி செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் சொலவம்பாளையம், வடபுதூர் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி வந்ததாக 2 லாரிகளை பிடித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததாக 2 லாரிகளுக்கும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.