பேனா நினைவுச்சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது - சீமான்
பேனா நினைவுச்சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என சீமான் கூறியுள்ளார்.;
சென்னை,
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு.
இவ்வாறு அவர் கூறினார்.