"பேனா நினைவு சின்ன விவகாரம்"... முதல் அமைச்சரிடம் சீமான் வைத்த திடீர் கோரிக்கை
பேனா நினைவுச்சின்னம் தொடர்பாக முதல் அமைச்சரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேனா நினைவு சின்ன விவகாரம் குறித்து அவர் கூறியதாவது;
கடல் என்பது பொதுச்சொத்து. பல கோடி உயிரினங்கள் வசிக்கும் இடமாகும். அந்த கடலில் கை வைக்கக்கூடாது.
நான் அண்ணனாக மதிக்கும் தமிழக முதல் அமைச்சரிடம் கேட்கிறேன்.. கடலுக்குள் நினைவுச்சின்னம் வேண்டாம். அய்யாவுக்கு பேனா நினைவுச்சின்னம் வைக்கவேண்டும் என்றால், நீங்கள் நினைவிடம் கட்டும் அதே இடத்தில் வையுங்கள்.
நினைவிடம் கட்டும் இடத்தில் பேனா நினைவுச்சின்னம் அமைத்தால், யாரும் எதுவும் கேட்கப்போவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.