மயிலம்,
மயிலம் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன், தேவதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 1 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் அமைப்பது, சிமெண்டு சாலை, ஆழ்துளை கிணறு, உயர்மட்ட குடிநீர் தொட்டி கட்டுவது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, கூட்டத்தில் பேசினர். இதில் ஒன்றிய துணைத் தலைவர் புனிதா ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.