6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வந்த6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-29 22:01 GMT

தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வந்த6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரமேஷ், திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம்- தஞ்சை

இங்கு பணியாற்றி வந்த குமரவடிவேல், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்- 2 அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த பூங்குழலி கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சூரியநாராயணன், தஞ்சை கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்-2 அலகு வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட கலெக்டர் திபக்ஜேக்கப் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்