பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேர் திருவிழா

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேர் திருவிழா;

Update: 2023-04-13 19:50 GMT

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில்

தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கோட்டையிலிருந்து மூலஸ்தானத்திற்கு வந்த நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல் செய்யப்பட்டது. கடந்த 4.4.23-ந்தேதி மூலஸ்தானத்தில் இருந்து மண்டபத்திற்கு வந்து பகல், இரவு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

தேரோட்டம் தொடங்கியது

12-ந்தேதி காவடித்திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை நாடியம்மன் 2 நாள் தேரோட்டம் 4.30 மணி அளவில் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் தேரடித்தெருவில் இருந்து 'நாடியம்மா' கோஷத்துடன் தேர் இழுத்தனர். தேர் வடசேரி ரோடு, பிள்ளையார் தெரு வழியாக வந்தது. தொடர்ந்து பிள்ளையார் தெரு முடிவில் தலைமை தபால் நிலையம் அருகில் தேர் 6.40-க்கு நிறுத்தப்பட்டு விசேஷ அபிஷேகம் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 2-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்